அன்வார் மகளுக்காக சைஃபுடினை விலகச் சொல்கிறார்களா?

- Shan Siva
- 09 May, 2025
கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயிலை போட்டியில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்தியை பிகேஆர் தலைவர் ஒருவர் மறுத்துள்ளார்.
சைஃபுதீன் உட்பட யாருக்கும் அத்தகைய உத்தரவு வழங்கப்படவில்லை என்று பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில் பேசிய உயர்மட்ட வட்டாரம், எஃப்எம்டி இணைய ஊடகத்திடம் தெரிவித்துள்ளது.
சைஃபுதீன் ஒதுங்கி நூருல் இஸ்ஸா அன்வருக்கு வழிவிடுமாறு அறிவுறுத்தப்பட்டதாக ஒரு வட்டாரம் கூறியதாக சின் சியூ டெய்லியில் வெளியான ஒரு கட்டுரைக்கு அந்த வட்டாரம் இவ்வாறு பதிலளித்தது.
துணைத் தலைவர் பதவியை தற்போது ரஃபிஸி ரம்லி வகிக்கிறார். 2022 ஆம் ஆண்டில் 16,668 வாக்குகள் பெரும்பான்மையுடன் சைஃபுதீனை தோற்கடித்த பிறகு தான் தேர்ந்தெடுக்கப்பட்ட பதவியை தாம் பாதுகாப்பதாக ரஃபிஸி அறிவித்துள்ளார்.
இருப்பினும், சின் சியூவின் கூற்றுப்படி, ரஃபிஸி தனது பதவியைப் பாதுகாக்க இன்னும் தன்னை முன்மொழியவில்லை.
PKR தலைவர் அன்வார் இப்ராஹிமின் மகள், முன்னாள் பெர்மாத்தாங் பாவ் எம்.பி., பதவிக்கு போட்டியிடுவாரா என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இருப்பினும் தொடர்ந்து ஆரூடங்கள் வலுத்த வண்ணம் உள்ளன!
Berita bahawa Saifuddin Nasution diminta tarik diri dalam perebutan jawatan Timbalan Presiden PKR dinafikan oleh seorang pemimpin parti. Beliau tegaskan tiada arahan dikeluarkan kepada mana-mana calon, termasuk Saifuddin.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *