நாங்கள் எதிரிகளா? எங்களுக்குத்தான் MP-க்கள் அதிகம்! - பெர்சாத்துவுக்கு பதிலடி

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 27: ஹம்சா ஜைனுதீன் பெரிகாத்தான் நேஷனலின் எதிரி என்ற பெர்சாத்து  தலைவர் ஒருவரின்  கூற்றை மச்சாங் எம்.பி. வான் அகமது ஃபைசல் வான் அகமது கமல் கேலி செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பாலான பிஎன் எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

ஹம்சா பிஎன்-ன் எதிரி என்ற கூற்று முன்னாள் பெர்சாத்து தலைவர்களில் ஒருவரின் நிலைப்பாட்டிற்கும், பிஎன்-க்கு வெளிப்படையாக ஆதரவை அறிவித்த 18 எம்.பி.க்களின் நிலைப்பாட்டிற்கும் முரணானது என்று கூறினார்.

பெர்சாத்து  தகவல் தலைவர் துன் பைசால்  இஸ்மாயில் அஜிஸ் கூறிய கூற்றுகள் தவறாக வழிநடத்துகின்றன. தற்போதைய நிலையில், ஹம்சா அனைத்து பிஎன் எம்.பி.க்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்கிறார் என்று முன்னாள் பெர்சாத்து தலைவர்களில் ஒருவரான வான் அமாட் பைசால் தெரிவித்தார்.

முன்னதாக, ஹம்சா மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிஎன் எதிரிகளாகக் கருதப்பட வேண்டும் என்றும், பெர்சாத்து மீதான எந்தவொரு தாக்குதலும் எதிர்க்கட்சி கூட்டணியின் மீதான தாக்குதலாகக் கருதப்பட வேண்டும் என்றும் துன் பைசால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *