5 மாநிலங்களைப் புயல் தாக்கும் அபாயம்! – MET MALAYSIA எச்சரிக்கை!
- Sangeetha K Loganathan
- 28 Dec, 2024
டிசம்பர் 28,
இன்று மாலை 5 வரையில் தீபகற்ப மலேசியாவின் 5 மாநிலங்களின் முக்கிய மாவட்டங்களைப் புயல் தாக்கும் அபாயம் இருப்பதாகத் தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கைவிடுத்துள்ளது.
பேராக், சிலாங்கூர், பகாங், ஜொகூர், நெகிரி செம்பிலான் ஆகிய 5 மாநிலங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்யும் அபாயம் இருப்பதால் மீட்பு ஆணையத்தின் அதிகாரிகளைத் தயார் நிலையில் இருக்கும்படியும் அறிவுருத்தப்பட்டுள்ளது.
மேற்கு மலேசியாவின் இந்திய பெருங்கடலில் தொடங்கும் புயல் பேராக்கின் Kinta, Kampar, Hilir Perak, Batang Padang வழியாகப் பகாங்கின் கேமரன், சிலாங்கூரின் GOMBAK, Sabak Bernam, Kuala Selangor வழியாக நெகிரிசெம்பிலான் ஜொகூரைத் தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் காற்றழுத்தத்தின் விளைவாகப் புயல் இந்தோனேசியாவின் கடல் வழியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என MET MALAYSIA எச்சரிக்கைவிடுத்துள்ளது.
MetMalaysia mengeluarkan amaran ribut petir, hujan lebat, dan angin kencang di Perak, Pahang, Selangor, Kuala Lumpur, Negeri Sembilan, Johor, Sarawak, dan Sabah hingga 5 petang. Kawasan terjejas termasuk Kinta, Klang, Limbang, dan Tongod.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



