மாலை 6 மணி வரை பல மாநிலங்களில் இடியுடன் கனமழை எச்சரிக்கை

top-news

Jabatan Meteorologi Malaysia (MetMalaysia) வெளியிட்ட சமீபத்திய வானிலை அறிவிப்பின் படி, இன்று மாலை 6 மணி வரை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கையில், மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு பிராந்தியத்தில் கெடா மாநிலத்தின் குவாலா முடா, பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு பகுதிகள் பாதிக்கப்படலாம். பினாங்கு மாநிலத்தில் செபராங் பெராய் உத்தரா, தெங்கா மற்றும் செலத்தான் பகுதிகளும் எச்சரிக்கைக்குள் உள்ளன.

பேராக மாநிலத்தில் கெரியான், லாருட், மாதாங்,  செலாமா, உலு பேராக், மற்றும் கம்பார் ஆகிய இடங்களில் மழை தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கரையில், ப்காங் முழுவதும் பாதிக்கப்படலாம். திரங்கானு மாநிலத்தில் உலு திரங்கானு, டுங்குன், கெமாமான் பகுதிகள் கவனத்தில் வைக்கப்பட்டுள்ளன. கிளாந்தான் மாநிலத்தின் குவா முசாங் பகுதியும் அபாய வட்டாரத்தில் அடங்குகிறது.

மழை, இடியுடன் கூடிய காற்று காரணமாக தாழ்வான பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *