கோலாலம்பூர் கால்பந்து அணிக்கு பிரதமர் ஒரு மில்லியன் நிதி அறிவிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 14-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், கோலாலம்பூர் கால்பந்து சங்கத்திற்கு ஒரு மில்லியன் ரிங்கிட் நிதியை அறிவித்தார். இந்த அறிவிப்பு, கோலாலம்பூர் கால்பந்து சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு தங்க விழா கொண்டாட்டத்தின் போது நடைபெற்றது. அன்வார், கால்பந்து மக்களின் விளையாட்டாக இருப்பதாகவும், இது பரவலாக விரும்பப்படுவதாகவும் கூறினார்,ஆனால் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தேசிய கால்பந்து முன்னேற்றத்திற்கு இது ஒரு வாய்ப்பு, ஆனால் அது அடிப்படையிலிருந்து தொடங்க வேண்டும். முறையான மைதானங்கள், பயிற்சி வசதிகள், பயிற்சி கூடங்கள் மூலம் குழந்தைகள் சிறப்பாக பயிற்சி பெற வேண்டும் என்று அவர் கூறினார். கல்வி அமைச்சு, உயர்கல்வி அமைச்சுடன் இணைந்து பயிற்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் கால்பந்து சங்கத்தின் தலைவர் சையத் யாஸித் சையத் ஒமர், இந்த நிதி சங்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும், கல்வி அமைச்சுடன் இணைந்து பள்ளி மட்டத்தில் கால்பந்து மேம்பாட்டிற்கும், இளைஞர், விளையாட்டு அமைச்சுடன் பயிற்சியாளர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தவும் சங்கம் திட்டமிட்டுள்ளது.

அன்வார், விளையாட்டு ஒற்றுமை, ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் ஓர் ஊடகமாக இருக்க வேண்டும் என்றும், ரசிகர்கள் மற்றும் வீரர்களிடையே விளையாட்டு உணர்வு பேணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த நிதி, கோலாலம்பூரில் உள்ளூர் கால்பந்து மைதானங்களை மேம்படுத்தவும், இளம் வீரர்களுக்கு பயிற்சி வாய்ப்புகளை வழங்கவும் பயன்படுத்தப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *