13ஆம் ஆண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் இந்தோனேசியா சென்றடைந்தார்!

top-news
FREE WEBSITE AD

ஜாகர்த்தா, ஜூலை 30-

மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான 13ஆம் ஆண்டு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நேற்று மத்திய ஜாகர்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவுக்கு சென்றடைந்தார்.

இரண்டு நாள் அலுவல் பயணம் மேற்கொண்டு இந்தோனேசியா சென்றிருக்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமை, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ வரவேற்றார்.அதேவேளையில், ஒருங்கிணைந்த நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் குறித்து
விவாதிக்க பிரதமர், பிரபோவோவுடன் சந்திப்பை மேற்கொள்வார்.

அச்சந்திப்பில், மலேசிய, இந்தோனேசிய பேராளர்கள் இணைந்து அதிகாரப்பூர்வ மதிய விருந்திலும் கலந்து கொள்ளவர்.அதைத் தொடர்ந்து நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக்கொள்ளப்படும்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *