பினாங்கிற்கு ஒரு நாள் அலுவல் பயணமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்!

top-news
FREE WEBSITE AD

ஜார்ஜ் டவுன், நவ 8:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பினாங்கிற்கு ஒரு நாள் அலுவல் பயணத்தைத் தொடங்கினார். ஜூரு-சுங்கை துவா போக்குவரத்து பரவல் திட்டமான PTJSD திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவர் கலந்துகொண்டார்.

RM1.2 பில்லியன் ரிங்கிட் செலவிலான இந்தத் திட்டம், முக்கியமான பாதையில் சுமார் 200,000 தினசரி பயனர்களுக்கு நெரிசலைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், புக்கிட் மெர்தாஜாமில் உள்ள செபராங் ஜெயா எக்ஸ்போ தளத்தில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினார்.

கடந்த அக்டோபரில் 2025 பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஒரு முக்கிய வடக்குப் பிராந்திய முயற்சி இந்த PTJSD திட்டம்  என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *