தேசிய கால்பந்து அணிக்கு பிரதமர் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 11: ஆசிய கிண்ண குரூப் எஃப் தகுதிச் சுற்றில் வியட்நாமை தோற்கடித்த தேசிய கால்பந்து அணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு போட்டியின் போது ஹரிமாவ் மலாயாவின் ஆட்டத்தை வலுவான மீள் வருகையின் தொடக்கமாக அன்வார் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள், ஹரிமாவ் மலாயா. புதிய தொடக்கமாக இருக்கட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையில், புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் வியட்நாமுக்கு எதிராக ஹரிமாவ் மலாயாவின் 4-0 என்ற வெற்றிக்கு பங்களித்த முழு உதவி மற்றும் ஆதரவிற்காக அன்வார் மற்றும் மலேசிய அரசாங்கத்திற்கு மலேசிய கால்பந்து சங்கம் (FAM) நன்றி தெரிவித்துள்ளது!

Perdana Menteri Anwar Ibrahim mengucapkan tahniah kepada Harimau Malaya atas kemenangan 4-0 menentang Vietnam dalam saingan Kelayakan Piala Asia. FAM turut merakamkan penghargaan kepada kerajaan atas sokongan penuh terhadap skuad kebangsaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *