மகாதீருக்காக பிரதமர் தம்பதியர் பிரார்த்தனை!
- Shan Siva
- 06 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 6: முன்னாள்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மது இன்று காலை தேசிய இருதய கழகமான (IJN)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி
டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில் ஆகியோர், அவரது
உடல்நலம் விரைவில் சீராகப் பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
அசீசாவும் தாமும் துன் அவர்களின் உடல்நலம் மேம்பட்டு, விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்.
இன்ஷா அல்லாஹ் என அன்வார் தனது
ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன், மகாதீரின் உதவியாளர் சுஃபி யூசோப், மகாதிர் வீட்டில் தவறி விழுந்த சம்பவத்திற்குப் பின்னரும் சுயநினைவுடன்
இருந்ததாகவும், ஆம்புலன்ஸ் மூலம் IJN-க்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும்
தெரிவித்தார்.
மகாதீர் தனது வீட்டில் பால்கனியிலிருந்து ஹாலுக்குச் செல்லும்
போது தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
100 வயதான டாக்டர்
மகாதீர், இதற்கு முன்பும்
பலமுறை IJN மருத்துவமனைக்குச்
சென்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி, புத்ராஜயாவில் நடைபெற்ற அவரது 100வது பிறந்தநாள் மற்றும் அவரது மனைவி
டாக்டர் ஹஸ்மா அலியின் 99வது பிறந்தநாள்
விழாவைக் கொண்டாடும் பிக்னிக் நிகழ்வில் கலந்து கொண்ட போது, உடல் சோர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் IJN-க்கு அனுமதிக்கப்பட்டார்.
அந்நிகழ்வில் சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்ட பின்னர் அவர் நிகழ்ச்சியை முன்கூட்டியே விட்டு விட்டு வெளியேறினார். பின்னர் உடல்நலக் கண்காணிப்புக்காக IJN-ல் அனுமதிக்கப்பட்ட அவர், அதே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



