பிரதமர் வேட்பாளர்.... நான் யாரையும் குறிவைக்கவில்லை! – ஹாடி அவாங்

top-news
FREE WEBSITE AD

அலோர் ஸ்டார், செப் 16:  அடுத்த பொதுத் தேர்தலுக்கான (GE16) பெரிக்காத்தான் நேஷனலின் பிரதமர் வேட்பாளர் 70 வயதுக்குட்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சி விரும்புவதாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதை அடுத்து, தாம் யாரையும் குறிவைக்கவில்லை என்று கூறினார்.

தாமும், பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாஷிம் ஜாசினும் அந்தப் பதவிக்கு மிகவும் வயதானவர்கள் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்த விரும்பியதாக ஹாடி குறிப்பிட்டுள்ளார்.

ஹாஷிம் மற்றும் தம்மைப் போன்ற 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் (பிரதமர் வேட்பாளராக பெயரிடப்பட வேண்டிய அவசியமில்லை), உடல் ரீதியாக வலிமையான இளைய ஒருவரைத் தேட வேண்டும் என்று தாம் கூறியதாக அவர் விளக்கமளித்தார்.

 இதை வேறு யாரையும் மனதில் வைத்து சொல்லவில்லை, அது தம்மை  நோக்கி தாமே திருப்பிவிட்டேன் என்று அவர் கூறினார். "தேசத்தை வளர்க்க அறிவு, ஞானம் மற்றும் வலிமை கொண்ட ஒரு தலைவரை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அடுத்த மாதம் 78 வயதை அடையும் மராங் எம்.பியுமான ஹாடி,  PAS அதன் பிரதமர் வேட்பாளராக "ஆரோக்கியமான மற்றும் 70 வயதுக்குட்பட்ட" ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் என்று கூறினார்.

அவரது இந்தக் கருத்துக்கள் PN தலைவர் முகிதீன் யாசினை நிராகரிப்பதாகத் தோன்றியது. அவருக்கும் இந்த ஆண்டு 78 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *