சபா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்க பிரதமர் உத்தரவு!
- Shan Siva
- 12 Sep, 2025
கோலாலம்பூர், செப் 12: சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்கவும், குடும்ப பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உத்தரவிடப்பட்டால் உடனடியாக வெளியேறுவது உட்பட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மீட்பு முயற்சிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் நலனை உறுதிசெய்து, நிலைமைகள் மேம்படும் வரை
அடிப்படைத் தேவைகள் மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு
நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சபாவில் வெள்ள நிலைமை மோசமடைந்து வருவதைக் கண்டு தாம் வருத்தமடைவதாகவும்,
அங்கு பெனாம்பாங் மற்றும் பியூஃபோர்ட்டில் 400 க்கும் மேற்பட்ட
பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையங்களுக்கு தங்கள் வீடுகளை விட்டு
வெளியேறியுள்ளனர், அவர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் தமது முகநூல் பதிவில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



