பிரதமரின் கூடுதல் விடுமுறை அறிவிப்பு- முதலாளிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 24-

இவ்வாண்டு மலேசியத் தினக் கொண்டாட்டத்துடன் இணைந்து செப்டம்பர் 15ஆம் தேதியை கூடுதல் பொது விடுமுறைக்கு முதலாளிகள் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்தார். பிரதமரின் அறிவிப்பை முதலாளிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முதலாளிகள் கூடுதல் பொது விடுமுறைக்கு இணக்கம் தெரிவித்து வழக்கமான சம்பளத்தை வழங்கலாம் அல்லது பொது விடுமுறை விகிதங்களின்படி வேலை செய்து ஊதியம் வழங்குமாறு தங்கள் ஊழியர்களுக்குத் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறினார்.தங்கள் ஊழியர்கள் அந்த பொது விடுமுறையில் வேலை செய்ய வேண்டியிருந்தால், முதலாளிகள் வேறொரு நாளில் மாற்று விடுமுறையை வழங்கவும் தேர்வு செய்யலாம் என்றார் அவர்.

கூடுதல் பொது விடு முறையை செயல்படுத்துவது நியாயமானதாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதிசெய்ய, தொழிலாளர் துறை ஆலோசனை சேவைகளை வழங்கவும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்கவும் தயாராக உள்ளது என்று ஸ்டீவன் குறிப்பிட்டார்.இந்த அறிவிப்பு நாடு தழுவிய அளவில் பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *