பிரதமரின் பதவிக் கால மசோதா; நாங்கள் ஆதரிக்க தயார்! - எதிர்க்கட்சி MP-க்கள்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மார்ச் 5:  பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு தங்களது கருத்துகள் இணைக்கப்பட்டால் ஆதரிக்க தயார் என எதிர்க்கட்சித் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களின் ஆதரவு சில முக்கிய திருத்தங்களின் அடிப்படையில் இருக்கும் என்றும் கூறினர். குறிப்பாக, பிரதமர் ஒரே நேரத்தில் நிதி அமைச்சராகவும் பதவி வகிக்கக் கூடாது என்ற பிரிவு சேர்க்கப்பட வேண்டும் என்பதும், பிரதமர் நியமனம் அரசர்மார்கள் பேரவை (Conference of Rulers) முன்னிலையில் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்பதும் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாகும்.

PN இளைஞர் தலைவர் மற்றும் அலோர் செத்தார் எம்.பி Afnan Hamimi Taib Azamudden, இந்த இரண்டு முக்கிய பரிந்துரைகளும் மசோதாவில் இணைக்கப்பட வேண்டும் என்றார். முன்னதாக Dewan Rakyat-இல் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடியாமல் மசோதா தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

பாடாங் செராய்ப் எம்.பி மற்றும் Bersatu உறுப்பினரான Azman Nasrudin, பிரதமரின் பதவிக்காலத்தை வரையறுக்கும் சீர்திருத்தங்களுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு இருப்பதாகவும், ஆனால் பிரதமர் ஒரே நேரத்தில் நிதி அமைச்சராக இருக்க முடியாது என்ற திருத்தம் அவசியம் என்றும் கூறினார்.

Perikatan Nasional மகளிர் தலைவர் மற்றும் மஸ்ஜித் தானா எம்.பி Mas Ermieyati Samsudin, இந்த மசோதாவுக்கு ஆதரவை ஒழுங்குபடுத்துவதில் அரசு மேலும் திட்டமிட்டிருக்க வேண்டும் என்றார்.

அரசுக்கு ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை உள்ளது. இது சரியான திட்டமிடலுடன் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டியது என்றார். விவாதத்தின் போது அவர்களது கருத்துகள் ஏற்கப்படாததால், அரசு தேவையான எண்ணிக்கையைப் பெற்றிருக்கும் என்ற நம்பிக்கையில் தாங்கள் நடுநிலையாக இருக்கத் தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கு முன், அரசு பேச்சாளர் Fahmi Fadzil, இந்த மசோதாவை ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள அடுத்த Dewan Rakyat கூட்டத்தில் மீண்டும் தாக்கல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.

சில எதிர்க்கட்சித் எம்.பிக்கள், அன்வார் 10 ஆண்டுகள் பிரதமராக இருக்க அனுமதிக்கிறோம் என்ற தவறான புரிதலுடன் வாக்களித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *