நட்மா தொடர்ந்து வளர்ச்சி காண பிரதமர் வாழ்த்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 2-

பேரிடர் நிர்வகிப்பில் நாட்டின் அரணாக தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா தொடர்ந்து வளர்ச்சி காண பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று நிறைவு ஆண்டைக் கொண்டாடிய அதன் ஊழியர்கள் அனைவருக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார்.

"நேற்று அக்டோபர் 1ஆம் தேதி தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம் நட்மா மக்களுக்கும் நாட்டிற்கும் சேவை செய்து 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. வெள்ளம், நிலச்சரிவுகள். காற்றுத்தூய்மைக்கேடு மற்றும் பெருந்தொற்றுகள் போன்ற பேரழிவுகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும் பத்தாண்டுகளாக நட்மா முன்னணியில் இருந்து வருகிறது. ஒவ்வொரு நெருக்கடியும்
மலேசியர்களின் உயிர் சொத்துகள், நல்வாழ்வைப் பாதுகாப்பதற்கான நடமாவின் உறுதியை நிரூபிக்கிறது". என்றார் அவர்.

2014/2015ஆம் ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்பட்ட பெரும் வெள்ளத்தைத் தொடர்ந்து, தேசிய. வட்டார. அனைத்துலக அளவில் தேசிய பாதுகாப்பு மன்றத்திடமிருந்து பேரிடர் நிர்வகிப்பிற்கான முன்னணி நிறுவனத்தின் பங்கை ஏற்க நட்மாவை நிறுவும் பரிந்துரை அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டது.

அந்நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு, வெறும் வெற்றியின் அடையாளம் மட்டுமல்ல. மாறாக, எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் தயார்நிலையை வலுப்படுத்தவும். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், ஒத்துழைப்பைத் தீவிரப்படுத்தவும் அவர்களுக்கு ஒரு புதிய தொடக்கமாகும் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *