சூரிய ஒளிபடும் நெகிழி பாட்டில்களில் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 26-

இன்றைய பரபரப்பான சூழலில் நடைமுறைக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள பெரும்பான்மையான மக்கள் விரும்புகின்றனர்.குறிப்பாக, பயணங்களின் போது நெகிழி பாட்டில்களில் குடிப்பதற்காக நீரை சேமித்து வைத்திருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது.




ஆனால், வாகனங்களில் நீண்ட நேரம் அல்லது பல நாள்களுக்கு வெயிலில் வைக்கப்பட்டிருக்கும் நீரைக் குடிப்பது, உடல் நலத்திற்குப் பாதுகாப்பானது அல்ல என்று எச்சரிக்கின்றது பினாங்கு பயனீட்டாளர் சங்கம்.

சூரிய ஒளிப்படும் அளவிற்கு, நீண்ட நேரம் வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் வெப்பம் நிறைந்த நெகிழி பாட்டில்களில் உள்ள நீரில். உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களை வெளியேற்றக்கூடிய தன்மை இருப்பதை ஆய்வுகள் காட்டுவதாக, பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்வி சுற்றுச்சூழல் அதிகாரி என்.வி. சுப்பாராவ் கூறினார்.

"இது வெறும் தண்ணீர் தானே. குடித்தால் என்ன தவறு என்று நாம் நினைக்கலாம். ஆனால், Science Of The Total Environment இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், நீண்ட நேரம் வெப்பத்தில் இருக்கும் நெகிழி பாட்டில்களில் இருக்கும் தண்ணீரைக் குடிப்பது தீங்கு விளைவிக்கும், இரசாயனங்கள் அதனுள் சென்றுவிடுவதாக அந்த ஆய்வு கூறுகின்றது", என்றார் அவர்.




மேலும், நெகிழி பாட்டில்கள் சூடான நீருடன் கலக்கும் போது, அவை ஒரு லீட்டருக்கு டிரில்லியன் கணக்கான நானோ துகள்களைத் தண்ணீரில் வெளியிடுவதாக, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மற்றோர் ஆய்வுக் காட்டுவதாக, அவர் கூறினார்.

எனவே, இரசாயனங்களும், நானோ துகள்களும் கலந்த நீரை நீண்ட காலத்திற்குக் குடிக்கும்போது, அவை உடல்நலத்திற்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று சுப்பாராவ் எச்சரித்தார்.

"இவற்றை நீண்ட காலத்திற்கு நாம் உட்கொள்ளும் போது, இந்த இராசயனங்கள் ஹார்மோன் சூழ்நிலையில் தலையிடலாம் என்று கூறுகின்றார்கள். முன்னதாகவே, பாட்டிலிலிருந்து சிறிதளவு தண்ணீரைக் குடித்திருந்தாலும், அந்த உமிழ் நீர் பக்டீரியாவை அறிமுகப்படுத்தப்படுகின்றது. ஆகவே, அத்தகைய பாட்டில்களில் இருந்து தண்ணீரைக் குடிப்பதால் வயிற்று அசௌகரியம் மற்றும் செரிமான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், ஆய்வுகள் காட்டுகின்றன”, என்று அவர் கூறினார்.

இதனிடையே, நீண்ட நேர பயணத்தை மேற்கொள்பவர்கள் தங்களின் தாகத்தைத் தணித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளையும் சுப்பாராவ் வழங்கினார். "நீர்சத்து உணவுகளை நாம் உண்பதால், இம்மாதிரியான தாகங்கள் நமக்கு ஏற்படாது. நீர் ஏற்றம் என்பது தண்ணீரைக் குடிப்பது மட்டுமல்ல, உங்கள் உணவில் நீர் நிறைந்த உணவுகளை நாம் உட்கொண்டாலும் நீர் ஏற்றம் நமக்கு வரும்.

தர்ப்பூசணி, வெள்ளரிக்காய்,ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதால் நீர் நம் உடலில் தாராளமாக சேர்கின்றது", என்று அவர் தெரிவித்தார்.எனவே, நெகிழி பாட்டில்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, வெப்பத்தைப் பொருட்படுத்தாது நீரைக் குளிர்ச்சியாகவும், பாதுகாப்பானதாகவும் வைத்திருக்கும். எஃகு ரகத்திலான பாட்டில்களைப் பயன்படுத்துமாறு, சுப்பாராவ் வலியுறுத்தினார்.

Air dalam botol plastik yang terdedah lama dalam kenderaan panas mengandungi bahan kimia dan zarah nano berbahaya. Ini boleh jejaskan kesihatan. Gunakan botol keluli tahan karat dan makan makanan tinggi kandungan air seperti tembikai dan timun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

aiPxvpay

555

aiPxvpay

555

if(now()=sysdate(),sleep(15),0)

555

aiPxvpay0'XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR'Z

555

aiPxvpay0"XOR(if(now()=sysdate(),sleep(15),0))XOR"Z

555

aiPxvpay-1 waitfor delay '0:0:15' --

555

aiPxvpayAhwSDkxH'; waitfor delay '0:0:15' --

555

aiPxvpay7q72AyG7' OR 533=(SELECT 533 FROM PG_SLEEP(15))--

555

aiPxvpayVgdBmzEb') OR 364=(SELECT 364 FROM PG_SLEEP(15))--

555

aiPxvpayKkI9ccod')) OR 806=(SELECT 806 FROM PG_SLEEP(15))--

555