விஜய் பற்றிய கேள்விக்கு வெட்கப்பட்ட திரிஷா!

top-news
FREE WEBSITE AD

நேற்று துபாயில் நடைபெற்ற சைமா விருது வழங்கும் விழாவில் நடிகை திரிஷாவுக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் ஒவ்வொரு டாப் ஹீரோக்களின் புகைப்படத்தை காட்டி அவர்களிடம் ஏதாவது கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அஜித் ஃபோட்டோ வந்தபோது, எப்படி உங்களால் 24 மணிநேரமும் எல்லோரிடமும் இவ்வளவு Kind ஆக இருக்க முடிகிறது? எனக் கேட்பேன் என்றார்.

பின்னர் விஜய் ஃபோட்டோ வந்தபோது திரிஷா வெட்கப்பட, ஒட்டுமொத்த அரங்கமும் அதிர்ந்தது. பின்னர் ரசிகர்களின் கரகோஷம் குறைந்த பிறகு பேசிய திரிஷா," அவரிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை ஆனால் அவருடைய புதிய பயணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பேன். அவருடைய கனவு என்னவாக இருந்தாலும் அதில் அவர் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துவேன். ஏனெனில் அதற்கு அவர் முழு தகுதியானவர்" என திரிஷா பேசினார். இதை கீழே கமல்ஹாசன் அருகில் அமர்ந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயன் கைத்தட்டியபடி ரசித்துக் கொண்டிருந்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *