எழுத்தாளர் தென்னரசு காலமானார் - செய்தியாளர்!
- Muthu Kumar
- 09 Jul, 2025
காஜாங், ஜூலை 9-
நம் நாட்டின்எழுத்தாளரும் செய்தியாளருமான தென்னரசு சின்னையா காலமானார். அவருக்கு வயது 55.சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த தென்னரசு செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
சிலாங்கூர் சிப்பாங், சுங்கை லீனாவ் தோட்டத்தில் பிறந்தவரான தென்னரசு, பாங்கி நகரத்துக்கு மாற்றலாகி வந்தார்.அங்கு அவர் முயற்சியில் பாங்கி வாசகர் வட்டம் அமைத்து சிறப்பாக பணியாற்றி வந்த அவர், தமிழ் வார, மாத, நாளிதழ்களுடன் அதிக தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு எழுத்துத் துறையில் முத்திரை பதித்தார்.வார, மாத இதழ்களுடன் தொடர்பை வலுப்படுத்திக் கொண்டு அந்த இதழ்களோடு கலந்துரையாடல்களை நடத்தினார்.
பாங்கி வட்டாரத்தில் இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அடித்தளமிட்டவரான தென்னரசு, பாங்கி வாசகர் வட்டத்தை உலுலங்காட் மாவட்ட வாசகர் இயக்கமாக உருமாற்றினார்.இளம் தலைமுறை எழுத்தாளர்களை உருவாக்குவதில் தனி அக்கறை கொண்டவரான தென்னரசு, பல்கலைக்கழக பட்டதாரி மாணவர்களை வாசகர் அமைப்புகளில் ஈடுபடுத்தி அவர்களிடையே இன, மொழி உணர்வை ஏற்படுத்தினார்.
தென்றல் - வானம்பாடி இதழ்களில் செய்தியாளராக பணியாற்றியவருமான அவர், அந்த இதழ்களின் வாசகர் இயக்கத் தேசியத் தலைவராகவும் இருந்து தமிழ்த் தொண்டாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் நல்லுடல் நாளை 10.7.2025 வியாழக்கிழமை எண். 9, ஜாலான் ஸ்ரீ பாங்கி 2, தாமான்ஸ்ரீ பாங்கி, காஜாங், சிலாங்கூர் எனும் முகவரியிலுள்ள அவரின் இல்லத்தில் காலை 11 மணி முதல் பகல் 1.00 மணிக்குள் இறுதிச் சடங்குகள் நடைபெற்று அதன்பின் செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்படும்.
Penulis dan wartawan terkenal, Tennarasu Chinnaiah, meninggal dunia di Hospital Serdang selepas sakit. Beliau aktif dalam dunia penulisan, mengasaskan Bangi Vaasagar Vattam, dan banyak menyumbang dalam pembangunan penulis muda serta penganjuran program kesusasteraan Tamil.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



