ராஜமௌலி படத்தில் வில்லனாக பிருத்விராஜ்!
- Muthu Kumar
- 08 Nov, 2025
எஸ்.எஸ்.ராஜமௌலி நடிகர் பிருத்விராஜின் அறிமுக போஸ்டரை வெளியிட்டுள்ளார். மகேஷ் பாபு உடனான அவரது படத்தில் வில்லனாக நடிப்பதாகவும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடித்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து ராஜமௌலி தனது பதிவில் கூறியதாவது:
பிருத்வியுடனான முதல் ஷாட்டினை எடுத்த பிறகு அவரிடம் சென்று, நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த நடிகர் நீங்கள்தான் எனக் கூறினேன்.கும்பா எனப்படும் அதிகாரமிக்க, கருணையற்ற, கொடூரமான வில்லன் கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துள்ளார். மிகவும் திருப்தியான உணர்வு.இந்தப் படத்தில் இணைந்ததுக்கு நன்றி பிருத்விராஜ் எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



