RM 21 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் 8 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 20,

சிலாங்கூர் கோலாலம்பூர் பகுதிகளில் தேசிய போதைப்பொருள் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் இரு வெவ்வேறு கும்பல்கள் போதைப்பொருள், துப்பாக்கிகள், சொகுசு வாகனங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகப் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை தலைமை இயக்குநர் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். முதல் கும்பல் செக்கின்ஜாங்கில் உள்ள குடியிருப்புப் பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் 2 ஆண்கள் ஒரு பெண் என மூவரிடமிருந்து methamphetamine, heroin, MDMA, ganja, ekstasi, Erimin 5 ஆகிய போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்ததுடன் ரொக்கப் பணமும் வெளிநாட்டு நாணயங்களும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.


சிலாங்கூர் ஜென்ஜாரோமில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள்களை வாகனத்தில் கடத்தியதாக 27 முதல் 37 வயதுள்ள 4 ஆண்களையும் 1 பெண்ணையும் காவல்துறை செய்ததாக Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். அவர்களிடமிருந்து 138 கிலோ methamphetamine, MDMA, heroin வகையிலானப் போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் அதன் மதிப்பு 8.4 மில்லியன் ரிங்கிட் என்றும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.


கைது செய்யப்பட்ட முதல் கும்பல் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் மலேசியாவிலிருந்து இந்தோனேசியாவுக்குப் போதைப்பொருளைக் கடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது. இரண்டாவது கும்பல் சிலாங்கூர் கோலாலம்பூர் பகுதிகளில் போதைப்பொருளை விற்பனை செய்து வருவதாகவும் கடந்த ஜூலை 2025 முதல் இயங்கி வருவதாகவும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இரு கும்பலைச் சேர்ந்தவர்களையும் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைத்திருப்பதாகவும் இரு நடவடிக்கைகளின் மூலமாக 21 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் Dato’ Hussein Omar Khan தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *