RM34 மில்லியன் மோசடி பணம் மீட்பு! – உள்துறை அமைச்சு!
- Thinagaren Sanggaren
- 27 Jan, 2026
ஜனவரி 27,
சட்டவிரோதப் பணமோசடிகளால் ஏமாற்றப்பட்ட பணத்தை உள்துறை அமைச்சு மீட்டு வருவதாகவும் முதற்கட்டமாகக் கடந்த ஆண்டு RM34 மில்லியன் ரிங்கிட் மீட்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். மீட்கப்பட்டிருக்கும் 34 மில்லியன் பணத்திலிருந்து இந்து வரையில் 6.7 மில்லியன் ரிங்கிட் பணம் பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
தற்போது இணைய மோசடிகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் NSRC எனும் சிறப்புப் படையினர் 24 மணிநேரமும் இயக்குகின்றனர். சமூகவலைத்தலங்கள் மூலமாக மட்டுமல்லாது சந்தேகத்திற்குரிய அலுவலகங்களையும் காவல்துறையின் உதவியுடன் இந்த NSRC அமைப்பு சோதனையிட்டு வருவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார். கடந்த ஆண்டு பண மோசடிகளின் மூலம் மொத்தம் RM542 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தனியார்,அரசு ஊழியர்கள், ஓய்வுப் பெற்றவர்கள், மாணவர்கள் வணிகர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



