RM 9.5 மில்லியன் லஞ்சம் வாங்கிய PKR நாடாளுமன்ற உறுப்பினர் யார்?
- THINAGAREN SANGGAREN
- 25 Mar, 2026
மார்ச் 25,
பி.கே.ஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் RM 9.5 மில்லியன் ரிங்கிட லஞ்சம் பெற்றதாகப் பிரபல தொழிலதிபர் Victor Chin குற்றம் சாட்டினார். Victor Chin வெளியிட்டுள்ள இந்த கருத்தால் பி.கே.ஆரின் தலைமையில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் கலக்கத்தில் இருந்து வரும் நிலையில் யார் அந்த பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை Victor Chin வெளியிட வேண்டும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari வலியுறுத்தியுள்ளார். சுமார் 40 பக்கம் கொண்ட அறிக்கையை வெளியிட்டிருக்கும் தொழிலதிபர் Victor Chin, பி.கே.ஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 10 மில்லியன் ரிங்கிட் வழங்குவதாக உத்தரவாதம் அளித்ததாகவும் அதில் 9.5 மில்லியன் ரிங்கிட்டை வழங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் யார் என்பதை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட வேண்டும் என்றும், வெளிப்படையான விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் என பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் Ahmad Fadhli Shaari வலியுறுத்தியுள்ளார். முன்னதாக KORPRAT MAFIA எனும் தலைப்பில் பி.கே.ஆரின் முன்னாள் துணைத் தலைவரும் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான RAFIZI RAMLI லஞ்சம் பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை முன்னாள் அமைச்சரான RAFIZI RAMLI நிராகதித்தார்.
கடந்த மார்ச் 16, காஜாங், Kemensah ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களைச் சோதனையிட்ட போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாகவும் விசாரணையின் போது அந்த வணிக வளாகங்கள் பிரபல தொழிலதிபரான Victor Chinக்குச் சொந்தமானவை என்றும் காவல்துறைத்தலைவர் Tan Sri Mohd Khalid Ismail தெரிவித்திருந்ததார். தற்போது காவல்துறையிடமிருந்து இந்த வழக்கு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் மூலமாக விசாரிக்கப்படும் என Tan Sri Mohd Khalid Ismail தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



