ஆயுதப்படை அதிகாரிகள் கைது!- பிரதமர் அதிரடி உத்தரவு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஆக 22: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சமரசம் செய்யாமல் இருப்பதை உறுதிசெய்ய, அவற்றை மறுபரிசீலனை செய்ய பாதுகாப்பு அமைச்சுக்கு (Mindef)  உத்தரவிட்டுள்ளார்.

மலேசிய லஞ்ச  ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மலேசிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பை (MDIO) சேர்ந்தவர்கள் உட்பட ஐந்து மூத்த ஆயுதப்படை அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதை அடுத்து பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், MACC தனது விசாரணையை முடித்தவுடன், முழு அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு பிரதமர் பாதுகாப்பு அமைச்சிடம் அறிவுறுத்தியதாக தகவல் தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் தெரிவித்தார்.

பிரதமர் தேசிய பாதுகாப்பு தாக்கங்கள் குறித்து கவலை கொண்டுள்ளார், மேலும் தேசிய பாதுகாப்பு சமரசம் செய்யப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய அனைத்து அம்சங்களையும் மறுபரிசீலனை செய்ய அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்  என்று ஃபாமி இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *