2026ஆம் ஆண்டு அகத்தியர் மாநாட்டிற்கு டாக்டர் அமீர் ஃபாரிட் மாநாட்டுத் துணைத்தலைவராக நியமனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 29-

திருவள்ளுவருக்கு முன் தோன்றிய முதல் சித்தர் அகத்தியர், மலேசியாவில் அகத்தியருக்கான அனைத்துலக மாநாடு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. முதல் முயற்சியான இம்மாநாட்டை ஓம்ஸ் அறவாரியத்தின் தலைவர் ஓம்ஸ்.பா.தியாகராஜன் தலைமையேற்று தமது ஏற்பாட்டுக் குழுவுடன் மிகவும் விமரிசையாக நடத்த திட்டமிட்டுள்ளார்.




மாநாடு தொடர்பான தகவல் பரிமாற்றம் தொடர்பாக கலந்துரையாட அகத்தியர் சிறப்புகளை நன்கறிந்த டாக்டர் அமீர் ஃபாரிட் இசாக்குடன் விருந்தோம்பல் சந்திப்பு நடந்தது. மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்த உத்தேசித்துள்ள இம்மாநாடு தொடர்பான இச்சந்திப்பை தலைவர் ஓம்ஸ்.பா.தியாகராஜன் தலைமையேற்க, செயலவை உறுப்பினர் ஸ்ரீ கிருட்ணா சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார். இச்சந்திப்பில் ஓம்ஸ்.பா.தியாகராஜன் அழைப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர் அமிர் ஃபாரிட் இசாக், மாநாட்டு துணைத் தலைவராக பொறுப்பை ஏற்றார்.

அகத்தியரின் மனித மனோவியல் தத்துவங்களை நன்கு படித்து தெளிந்த டாக்டர் அமீரின், அகத்தியர் சித்தர்கள் தகவல்கள் வழி நம் நாட்டின் பல்லின, சமய, கலை கலாசார விழுமியங்கள் தங்கு தடையின்றி தொடர்வதை உணர முடிந்தது. டாக்டர் அமிர் ஃபாரிட் இசாக் பல நாடுகளுக்குச் சென்ற போதெல்லாம் தம் மகப்பேறு வைத்திய துறையில் இயற்கைசார் மனுக்குலத்துக்கு தந்துள்ள பஞ்ச பூகு சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டார். டாக்டர் அமீரின் சித்தர் சிந்தனைகளான ஆன்மீக, உணர்ச்சி, உடல் ரீதியான மனித சக்தியின் ஆளுமை,

அதிகாரமளித்தல் எனும் மதச்சார்பின்மை சிந்தனை நம்மை வெகுவாகக் கவர்ந்தது. மாநாட்டில் மலாய், ஆங்கில மொழிகளில் கொள்கை உரை அகத்தியரின் தந்துவங்களை இன்னும் விரிவடையச் செய்யும் என நம்பலாம்.

இந்தச் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர் ஓம்ஸ்.பா. தியாகராஜன், டாக்டர் அமீரைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிகொண்டு மாநாட்டுக்கு துணைத்தலைவர் பொறுப்பு ஏற்றமைக்கு டாக்டருக்கு நன்றி தெரிவித்து பிற பொறுப்பு அதிகாரிகளையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இச்சந்திப்பில் மாநாட்டின் துணைத் தலைவர் முனைவர் எஸ்.குமரன், ஆலோசகரான சத்தியா அகத்தியர், மாநாட்டு மலர் ஆசிரியர் ஔவை முருகன், செயலர், பொன் ரங்கன், செயலவை உறுப்பினர்கள். கிருட்ணா, திருமதி ஸ்ரீ திவ்யா, இலட்சுமிகாந்தன், உதயகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *