இந்தியர்களின் நலன் தொடர்பாக இணை நிதி அமைச்சருடன் இந்திய MP-க்கள் சந்திப்பு!
- Thinagaren Sanggaren
- 31 Jul, 2025
ஜூலை 31,
13 ஆவது மலேசியத் திட்டத்தில் இந்தியர்களின் நலன் மற்றும் பயன் குறித்து இரண்டாவது நிதி அமைச்சரும் பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சாவுடன் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புக் கலந்துரையாடலை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN RAYER, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன். சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஆகியோ பங்கேற்றதாகத் தெரிய வந்துள்ளது.
13 ஆது மலேசியத்
திட்டத்தில் அனைத்து மலேசியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடுகள், அதன் தரம் மேம்பாடுகள் கருத்தில்
கொள்ளப்பட்டிருப்பதாகவும் முக்கியமாக இன மத வேறுபாடுகள் இல்லாமல் வறுமை கோட்டுக்குக்
கீழிருப்பவர்களின் அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யும்படியாக இந்த 13 ஆவது மலேசியத்
திட்டம் கட்டமைக்கப்பட்டிருப்பதாக இரண்டாவது நிதி அமைச்சரும்
பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா நம்பிக்கை அளித்துள்ளார். நாடாளுமன்ற
விவாதத்தின் போது இந்தியர்களுக்கான சிறப்புச் சலுகைகள் குறித்தும் முன்மொழியப்படும்
கருத்துகளைத் தாம் ஏற்பதாகவும் இரண்டாவது நிதி அமைச்சரும் பொருளாதார அமைச்சருமான டத்தோ
ஸ்ரீ அமீர் ஹம்சா தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



