இந்தியப் பெண் தொழில்முனைவோருக்குப் புதிய பாதை! – மைக்கி மகளிர் தலைவி ஹேமலா சிவம்!
- Thinagaren Sanggaren
- 02 Aug, 2025
ஆகஸ்ட் 2,
பிரதமர் அன்வாரால் முன்மொழியப்பட்டிருக்கும் 13 ஆவது மலேசிய பெருந்திட்டம் வெறும் கொள்கை ஆவணமாக இல்லாமல் துணிச்சலானச் செயல்திறன் கொண்ட வரைப்படம் என இந்திய வர்த்தகத் தொழில்துறை சம்மேளனமான MAICCI மகளிர் தலைவியும் புத்ரி நிறுவன மேலாளருமான ஹேமலா சிவம் தெரிவித்தார். குறிப்பாக மகளிர் தொழில்முனைவோர் மேம்பாடுகள் தொடர்பாக இந்திய பெண் தொழில்முனைவோர்களும் பயனளிக்கும் வகையில் 13 ஆவது மலேசிய பெருந்திட்டம் முன்மொழியப்பட்டிருப்பதாக ஹேமலா சிவம் சுட்டிக்காட்டினார். இதுநாள் வரையில் மலேசியப் பெருந்திட்டத்தில் அங்கீகரிக்கப்படாத பெண்கள் தொழில்முனைவோர் குறித்தான அம்சங்களை அன்வார் தலைமையிலான மடானி அரசு அங்கீகரித்திருப்பதும் குறிப்பாக இந்தியப் பெண்கள் வணிகத்திற்கு முக்கியத்துவம் அளித்திருப்பதையும் வரவேற்க வேண்டும் என இந்திய வர்த்தகத் தொழில்துறை சம்மேளனமான MAICCI மகளிர் தலைவியும் புத்ரி நிறுவன மேலாளருமான ஹேமலா சிவம் வலியுறுத்தினார்.
பல காலமாகத் தொழில்துறையில் வணிகர்களாகச் செயல்பட்டு வரும்
குறிப்பாக இந்திய பெண்கள் சிறு குறு வணிகர்களாகவே இருந்து வருவதாகவும் இந்த 13 ஆவது
மலேசியப் பெருந்திட்டத்தில் மகளிர் நலன் மேம்பாடுகளின் பிரிவில் மகளிர் தொழில்முனைவோருக்கான
ஆதரவுகளும் நிதியும் வழங்கப்படுவதைக் காட்டிலும் பெண் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளையும்
திறன்மேம்பாட்டுக்கான வாய்ப்புகளும் இடம்பெற்றிருப்பதை ஹேமலா சிவம் வரவேற்றார். SPUMI,
PPSMI என்பவைத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் மூலமாக வழங்கப்பட்டாலும்
அது தனி அமைச்சின் பங்களிப்பாகவே கருதப்படுவதையும் ஹேமலா சிவம் மேற்கோள்காட்டினார்.
உண்மையில் இந்திய பெண் தொழில்முனைவோர்கள் நிதி உதவிகளைக் காட்டிலும் திறன் ஆதரவையும்
வாய்ப்புகளை எதிர்பார்ப்பதை 13 ஆவது மலேசிய பெருந்திட்டம் நிறைவேற்றியிருப்பதாக ஹேமலா
சிவம் நம்பிக்கை தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



