பள்ளியில் முதலை! சிம்பாங் ரெங்காமில் பரபரப்பு!

top-news
FREE WEBSITE AD

சிம்பாங் ரெங்காம், செப் 6: இன்று காலை சிம்பாங் ரெங்காம் அருகே உள்ள எஸ்.எம்.கே டத்தோ ரஹ்மான் ஆண்டக் பள்ளி மைதானத்தில் முதலை காணப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்களால் சுமார் நான்கு அடி (1.2 மீட்டர்) அளவிலான முதலை பின்னர் பிடிக்கப்பட்டது.

காலை 8.15 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை அடுத்து, ரெங்காம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழுவும், தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT) வாகனமும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக ஜொகூர் செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்திற்கு குழு வந்தவுடன், பள்ளி மைதானத்திற்குள் முதலையைப் பார்த்ததும் அதனை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

முதலையைப் பிடிக்கும் நடவடிக்கை கண்ணி கருவிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டது.

காலை 8.35 மணிக்கு நடவடிக்கை முடிவுக்கு வந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் எவரும் பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *