வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவர் கைது!

top-news

ஏப்ரல் 5,

19 வயது வளர்ப்பு மகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 54 வயது ஆடவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக Tawau மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாலை 4.50 மணிக்குச் செம்பூர்னாவில் உள்ள அவரின் தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றும் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 19 வயது இளம்பெண்ணின் தாயார் சம்மந்தப்பட்ட ஆடவரை இரண்டாம் கணவராகத் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில் தனது வளர்ப்பு மகளின் மீது பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கொடுத்த புகார் அளித்ததாகவும் Tawau மாவட்டக் காவல் ஆணையர் Champin Piuh தெரிவித்தார்.

Seorang penganggur warga asing ditahan selepas disyaki merogol anak tirinya berusia 19 tahun di Tawau. Suspek berusia 54 tahun itu ditangkap di Semporna dan tidak memiliki dokumen sah. Kes disiasat di bawah pelbagai seksyen undang-undang.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *