மலேசியா அமெரிக்கா இடையிலான வரி குறித்த சந்திப்பில் முன்னேற்றம்-அன்வார்!

- Muthu Kumar
- 19 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 19:
மலேசிய ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்ட வரிகள் குறித்து விவாதிக்க வாஷிங்டன் உடனான கூட்டங்களில் சிறப்பான முன்னேற்றம் இருப்பதாக பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் உடனான சந்திப்பிற்குப் பிறகு, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அஜீஸ் மற்றும் இர்ண்டாவது நிதியமைச்சர் அமீர் ஹம்சா அஜிசான் ஆகியோரிடமிருந்து சாதகாமான பதில்களைப் பெற்றதாக அன்வார் கூறினார்.
சந்திப்பு சிறப்பாக நடந்ததாக அவர்கள் கூறியதாக, 38வது ஆசிய பசிபிக் வட்டமேசை நிகழ்வில் தனது முக்கிய உரையின் போது அன்வார் இவ்வாறு கூறினார்.மலேசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர தெங்கு ஜஃப்ருல் வாஷிங்டனுக்குப் பயணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய 24% வரி விகிதத்தைக் குறைத்தல், வரி அல்லாத தடைகளை நிவர்த்தி செய்தல் மற்றும் மலேசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மையைக் குறைத்தல் ஆகிய மூன்று முக்கிய பகுதிகளில் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!
Perdana Menteri Anwar Ibrahim menyatakan perbincangan dengan Washington mengenai cukai ke atas eksport Malaysia menunjukkan kemajuan positif. Tiga fokus utama ialah pengurangan cukai 24%, penghapusan sekatan bukan cukai, dan pengurangan ketidakseimbangan perdagangan dengan Amerika Syarikat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *