காலியான வீட்டிலிருந்து RM 18,700.00 கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
ஆளில்லாத வீட்டில் கடத்தல் சிகரெட்டுகளைப் பதுக்கி வைத்திருப்பதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட வீட்டை எல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் சிறப்புப் படையினர் சோதனையிட்டதில் 10,000 சிகரெட் பாக்கேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நண்பகல் 3 மணியளவில் தானா மேராவில் உள்ள கம்போங் Pelain பகுதியில் இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் PGA சிறப்புப் படை ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
சம்மந்தபட்ட வீட்டில் மனித நடமாட்டங்களுக்கான எந்தவொரு தடயங்களும் இல்லை என்பதால் கடத்தலில் சம்மந்தபட்டவர்களைத் தேடி வருவதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட 10,000 கடத்தல் சிகரெட்டுகள் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் கொண்டுவரப்பட்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக PGA ல்லை பாதுகாப்புக் கடத்தல் பிரிவின் சிறப்புப் படை உறுதிப்படுத்தியது. பறிமுதல் செய்யப்பட்ட கட்டத்தல் சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் RM 18,700.00 என கணக்கிடப்பட்டுள்ளது.
Sebanyak 10,000 pek rokok seludup bernilai RM18,700 dirampas dari sebuah rumah kosong di Kampung Pelain, Tanjung Malim. Rampasan dilakukan oleh pasukan khas PGA hasil maklumat awam. Siasatan lanjut sedang dijalankan untuk mengesan suspek.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *