RM 6 லட்சம் மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 11,

சிலாங்கூரில் கடத்தல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நால்வர் நேற்றிரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கை பூலோவில் உள்ள பொருள் கிடங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெளிநாட்டைச் சேர்ந்த நால்வரும் கடத்தல் சிகரெட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டதாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார். 

அவர்களிடமிருந்து பல்வேறு வகையிலான சிகரெட்டுகள் அடங்கிய 8,727 அட்டைப்பெட்டிகளும் ஒரு லாரி உட்பட 8 சொகுசு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் சிகரெட்டுகளின் மதிப்பு RM639,470.00 என்றும் வாகனங்களில் மதிப்பு RM374,600.00 என்றும் மொத்தமாக RM1,014,070.00 ரிங்கிட் மதிப்பிலானப் பொருள்களைக் காவல்துறை பறிமுதல் செய்திருப்பதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் வெளிநாட்டினர்கள் என்பதால் அவர்களின் பின்னனியில் இருக்கும் கடத்தல் கும்பல் குறித்து காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர்  Dato Shazeli Kahar தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *