ரமணன் அமைச்சராவாரா? மாட் சாபூ மாற்றப்படுவாரா? 4 செனட்டர்கள் நிலை? அமைச்சரவை மாற்றம் உறுதி!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 9,

அமைச்சரவை மாற்றங்கள் குறித்து அமைச்சர்களிடையே பல்வேறு கருத்துகள் வெளிவந்திருக்கும் நிலையில் அமானா கட்சியின் தலைவர் Datuk Seri Mohamad Sabu தனது அமைச்சை மாற்றினால் தாம் அதை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழக அமைச்சர் Datuk Ewon Benedick தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அதன் துணை அமைச்சர் DATUK SERI R.RAMANAN அமைச்சராகும் வாய்ப்பும் அமைய பெற்றுள்ளது. முன்னதாக உயர்கல்வி அமைச்சர்  Zambry Abdul Kadir அமைச்சரவை மாற்றங்கள் ஒரு சில வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த நிலையில் டிசம்பர் மாதம் அமைச்சரவை மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. காரணம் தற்போது வர்த்தகத் தொழில்துறை மூலதன அமைச்சராக இருக்கும் Tengku Zafrul செனட்டராகப் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் அவர் மீண்டும் செனட்டராக நியமிக்க முடியாது. செனட்டர் அல்லாதவர் அமைச்சர் பொறுப்பில் இருக்க முடியாது என்பதால் Tengku Zafrul வகிக்கும் அமைச்சர் பொறுப்பு வேறொரு அமைச்சருக்கு வழங்கப்படலாம்.

உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail, மத விவகார அமைச்சர் Na’im Mokhtar ஆகிய இரு செனட்டர்களும் தங்கள் 3 ஆண்டுகள் செனட்டர் பதவியை நிறைவு செய்துள்ளனர். அவர்களின் செனட்டர் பதவி டிசம்பர் மாதம் நிறைவு பெறுவதால் அவர்களின் செனட்டர் பதவி நீட்டிக்கப்பட்டு மீண்டும் அமைச்சராகப் பொறுப்பிலிருப்பார்கள். ஆனால் செனட்டர் பதவி என்பது அதிகப்பட்சம் 6 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும் என்பதால் வர்த்தகத் தொழில்துறை மூலதன அமைச்சராக இருக்கும் Tengku Zafrul மீண்டும் செனட்டராகப் பதவி வகிக்க முடியாது. 

இதனை தொடர்ந்து தற்போது . தொழில்முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுக் கழக அமைச்சர் Datuk Ewon Benedick பதவி விலகியதை அடுத்து பி.கே.ஆரின் உதவித் தலைவராக இருக்கும் DATUK SERI R.RAMANAN அமைச்சராகும் வாய்ப்பும் அமைய பெற்றுள்ளது. ஏனெனில் தற்போதைய பி.கே.ஆரின் 4 உதவித் தலைவர்களில் DATUK SERI R.RAMANAN மட்டுமே துணை அமைச்சராக இருக்கிறார். மற்ற உதவித் தலைவர்களான AMIRUDIN SHARI சிலாங்கூர் மெந்திரி பெசாராகவும், CHANG LIH KANG அறிவியல் தொழில்நுட்பம் புத்தாக்க அமைச்சராகவும், AMINUDDIN HARUN நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசார் என ரமணனை விடவும் அதிக ஆளுமைக் கொண்ட பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்புகள் வழங்கப்படுவது வழக்கமான நிலையில் பி.கே.ஆரின் புதிய துணைத் தலைவரான நூருல் இசாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அவர்களின் செனட்டர் பதவி டிசம்பர் நிறைவுக்கு வருவதால் அவரின் செனட்டர் பதவி நீட்டிக்கப்பட்டால் மட்டுமே அவரும் துணை அமைச்சராக நீட்டிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *