10 அமைச்சர்கள் 17 துணை அமைச்சர்கள்! மொத்தமாக மாற்றிய பிரதமர் அன்வார்!
- Thinagaren Sanggaren
- 16 Dec, 2025
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இன்று அதிரடியாகப்
புதிய அமைச்சர் துணை அமைச்சர்கள் பதவிகளை அறிவித்துள்ளதில் மனிதவள அமைச்சராக டத்தோ
ஸ்ரீ ரமணனும் ஒற்றுமை துறை துணை அமைச்சராக செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரனும்
நியமிக்கப்பட்டுள்ளனர். அன்வார் அறிவித்துள்ள புதிய அமைச்சர் துணை அமைச்சர் பட்டியலில்
10 அமைச்சர்களும் 17 துணை அமைச்சர்களும் என மொத்தம் 27 அமைச்சர் துணை அமைச்சர்களை அன்வார்
அறிவித்துள்ளார்.
- தொழில்முனைவோர் கூட்டுறவுத் துறை துணை அமைச்சராக
இருந்த DATUK SERI R RAMANAN மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். சுற்றுலா
கலை கலாச்சாரத் துணை அமைச்சராக இருந்த datuk khairul firdaus akbar khan மனிதவள அமைச்சின் துணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
- செனட்ட்டர் சரஸ்வதி கந்தசாமிக்குப் பதிலாகச் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யுனேஸ்வரன் ஒற்றுமை துறை துணை அமைச்சரா நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சராக DATUK JOHARI ABDUL GHANI நியமிக்கப்பட்டுள்ளார். அதன் துணை அமைச்சராக Bayan Baru நாடாளுமன்ற உறுப்பினர் Sim Tze Tzin நியமிக்கப்பட்டுள்ளார்.
- இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த HANNAH YEO பிரதமர் துறையின் கூட்டரசு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். கூட்டரசு வளாகத் துணை அமைச்சராக TAWAU நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Lo Su Fui நியமிக்கப்பட்டார்.
- பிரதமர் துறையில் சபா சரவாக் மாநிலங்களுக்கான புதிய அமைச்சராக Sepanggar நாடாளுமன்ற உறுப்பினரான Datuk Mustapha Sakmud நியமிக்கப்பட்டுள்ளார்.
- சுகாதார அமைச்சராக இருந்த Datuk Seri Dr Dzulkefly Ahmad பிரதமர் துறையின் இஸ்லாமிய மத விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன் துணை அமைச்சராக அனைத்துலக இஸ்லாமிய மத போதகரான Ustazah Marhamah Rosli நியமிக்கப்பட்டுள்ளார்.
- பெருந்தோட்டத் தொழில்துறை மூலப்பொருள் அமைச்சராக இருந்த Datuk Seri Haji Johari bin Abdul Ghani முதலீடு வர்த்தகத் தொழில்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
- மனிதவள அமைச்சராக இருந்த steven sim தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுக் கழக அமைச்சராக மாற்றப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத் துறை துணை அமைச்சராக இருந்த datuk mohamad al amin தொழில்முனைவோர் கூட்டுறவுத் துணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
- விவசாய உணவு பாதுகாப்பு துணை அமைச்சராக இருந்த Dato' Sri Arthur Joseph Kurup இயற்கை வளம், கனிமவள அமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில் Ledang நாடாளுமன்ற உறுப்பினரான Syed Ibrahim bin Syed Noh அதன் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
- எரிசக்தி நீர் உருமாற்று துணை அமைச்சராக இருந்த Akmal Nasrullah Mohd Nasir பொருளாதார அமைச்சராகவும், Paya Besar நாடாளுமன்ற உறுப்பினரான Dato' Indera Mohd Shahar பொருளாதார துணை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
- பொண்கள் குடும்ப நலன் சமூக மேம்பாட்டு துணை அமைச்சரான Datuk Seri Dr. Noraini binti Ahmad பெருந்தோட்டத் தொழில்துறை மூலப்பொருள் அமைச்சராகவும் அதன் துணை அமைச்சராக Sarikei நாடாளுமன்ற உறுப்பினரான Dato' Sri Huang Tiong Sii-யும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சராக SUNGAI PETANI நாடாளுமன்ற உறுப்பினரான Dr. Mohammed Taufiq Johari பொறுப்பேற்ற நிலையில் அதன் துணை அமைச்சராக Mas Gading நாடாளுமன்ற உறுப்பினரான Mordi anak Bimol நியமிக்கப்பட்டுள்ளார்.
- முதலீடு வர்த்தகத் தொழில்துறை துணை அமைச்சராக இருந்த Liew Chin Tong நிதி அமைச்சின் துணை அமைச்சராக பொறுப்பேற்றார்.
- மனிதவள அமைச்சின் துணை அமைச்சராக இருந்த
Dato' Sri Haji Abdul Rahman bin Haji Mohamad எரிசக்தி
நீர் உருமாற்று அமைச்சின் துணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
- பெருந்தோட்டத் தொழில்துறை மூலப்பொருள் துணை அமைச்சராக இருந்த Datuk Chan Foong Hin விவசாய உணவு பாதுகாப்பு துணை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
- சுகாதாரத் துறை துணை அமைச்சராக இருந்த Dato
Lukanisman bin Awang Sauni
- வெளியுறவுத் துணை அமைச்சராகவும், நிதி அமைச்சின் துணை அமைச்சராக இருந்த LIM HUI YING பெண்கள் குடும்ப நலன் சமூக மேம்பாடு துணை அமைச்சராகவும், இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சராக இருந்த ADAM ADLI உயர்கல்வி அமைச்சின் துணை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
- மீரி நாடாளுமன்ற உறுப்பினர் Chiew Choon Man சுற்றுலா கலை கலாச்சார அமைச்சின் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொருளாதாரத் துறை துணை அமைச்சராக இருந்த Dato Hajjah Hanifah Hajar Taib சுகாதாரத் துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று நண்பகல் 3.30 மணிக்குப் பிரதமர் Datuk
Seri Anwar Ibrahim 10 அமைச்சர்களையும் 17 துணை அமைச்சர்களை
மாற்றியிருக்கும் நிலையில் நாளை காலை 10 மணிக்கு இவர்கள் அனைவரும் மாமன்னர் மாளிகையில்
பதவி உறுதிமொழி எடுப்பார்கள் என்றும் மாலை 3 மணிக்கு அமைச்சரவைப் பொறுப்புகளைத் தொடங்குவார்கள்
என்றும் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



