நீலாய் தங்க நகைக் கடை கொள்ளை: சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்பு

top-news

நீலாய், ஜன. 21-

 பண்டார் பாரு நீலாய் பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அமைந்துள்ள தங்க நகைக் கடையைக் கொள்ளையடித்த பின்னர், சந்தேகநபர்கள் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் இன்று மீட்கப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நீலாய் மாவட்ட காவல் துறை தலைவர், சூப்பிரிண்டெண்ட் ஜோஹாரி யாஹ்யா , நீல நிற யமஹா Y15 வகை மோட்டார் சைக்கிள் சம்பவ இடத்திலிருந்து அதிக தூரம் அல்லாத பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக அவர் கூறினார்.

“நேற்றிரவு நிகழ்ந்த தங்க நகைக் கடை கொள்ளை சம்பவம் தொடர்பான விசாரணையில், சந்தேகநபர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது சம்பவ இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது,” என அவர் விளக்கினார்.

இந்த மீட்பு, விசாரணைக்கு முக்கிய திருப்பமாக அமையும் என போலீசார் நம்புகின்றனர். சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன், பொதுமக்களிடமிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *