கொள்ளையில் ஈடுபட்ட நண்பர்கள் கைது!

top-news

மே 13,

கிளாந்தானில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டு 4 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகக் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் கூட்டாகச் சேர்ந்து அங்காடிக் கடைகளிலும் பல்பொருள் கடைகளிலும் தொடர்ந்து 6 கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் இருவரையும் விசாரிக்க Majistret நீதிமன்றம் இன்று முதல் வெள்ளிக் கிழமை வரையில் 4 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. நேற்று அதிகாலை 6.45 மணிக்கு கோத்தா பாருவில் உள்ள அங்காடிக் கடையில் கொள்ளையடிக்கும் போது அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் 24 வயது கடையின் ஊழியர் துரிதமாகக் காவல்நிலையத்திற்குப் புகார் அளித்ததால் இருவரையும் சம்பவ இடத்திலேயே காவல்துறை கைது செய்தததாகவும் கிளாந்தான் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Yusoff Mamat தெரிவித்தார்.

Dua rakan ditahan di Kelantan kerana terlibat dalam enam kes rompakan melibatkan kedai runcit dan serbaneka. Mereka ditahan ketika cuba merompak sebuah kedai di Kota Bharu. Mahkamah Majistret mengarahkan reman selama empat hari untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *