பூக்கடையில் பாராங்கத்தியுடன் கொள்ளையடித்த கும்பல்!

top-news

ஏப்ரல் 22,

பூக்கடையிலிருந்த இரு பெண்களிடம் பாராங்கத்தியுடன் வந்த கும்பல் கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியது. இச்சம்பவம் நேற்று நண்பகல் 1.30 மணியளவில் ஜென்ஜாரோமில் உள்ள கோயில் வளாகத்திலிருந்த பூக்கடையில் நிகழ்ந்ததாக Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sufian Amin தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரும் நேற்று மாலை 4.50 மணிக்குக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அவர் தெரிவித்தார்.

இக்கொள்ளை சம்பவத்தில் இரு பெண்களும் RM4,000 மதிப்பிலான நகைகளைப் பறிகொடுத்ததாகவும் இருவருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sufian Amin தெரிவித்தார். இரு பெண்களும் பூக்கடையில் இருக்கும் போது வாகனத்தில் பாராங்கத்தியுடன் முகமூடி அணிந்த கும்பல் அவர்களை மிரட்டி கொள்ளையடிக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலத்தில் பரவியதைத் தொடர்ந்து CCTV காணொலியின் அடிப்படையில் கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் தேடி வருவதாக Kuala Langat, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sufian Amin தெரிவித்தார்.

Dua wanita menjadi mangsa rompakan bersenjata parang di sebuah kedai bunga di Jenjarom. Suspek memakai topeng dan melarikan barang kemas bernilai RM4,000. Polis sedang mengenal pasti suspek berdasarkan rakaman CCTV.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *