RON 95 எரிவாயு விலை குறைக்கப்படும்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

இனி வரும் காலங்களில் எரிபொருளுக்கான விலை குறைக்கப்படும் என்றும் அரசு மானியம் எரிபொருளுக்குச் செலவு செய்வதில் அக்கறை கொள்ளும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை தெரிவித்தார். எரிபொருள் மானியம் அமல்படுத்தப்பட்ட பிறகு RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறையும் என பிரதமர் Datuk Seri Anwar Ibrahim நம்பிக்கை அளித்தார். எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களிடையே பல்வேறு சிக்கல்களைக் கொண்டு வந்ததைத் தாம் உணர்ந்தாலும் உலகப் பொருளாதார மந்த நிலையின் காரணமாகக் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததை அன்வார் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் இந்த எரிவாயு விலை சுமையை அரசாங்கம் சுமக்க முடிவு செய்திருப்பதாகவும் இதன் மூலமாக ஆண்டுக்கு கிட்டத்தட்ட RM20 பில்லியன் செலவாகும் என்பதை அன்வார் நினைவூட்டினார். இப்போது எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டிய அவசியத்தை நான் உணர்ந்திருக்கிறேன். ஆனால் எண்ணெய் விற்பனையின் சந்தை விலை இன்னும் லிட்டருக்கு RM2.50 இருக்கிறது. நாங்கள் அதை லிட்டருக்கு RM2.05க்கு விற்கிறோம் என அன்வார் தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *