ரொனால்ட் கியாண்டி இடைநீக்கம்
- Surendran Sumdraraj
- 10 Mar, 2026
கோலாலம்பூர், மார்ச் 10-
பெர்சத்து (BERSATU) கட்சியின் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டியின் கட்சி உறுப்பினர் பதவி இன்று முதல் இரண்டு தவணைகளுக்கு அதாவது ஆறு ஆண்டுகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலுரான் நாடாளுமன்ற உறுப்பினரான ரொனால்ட் கியாண்டி, கட்சியின் ஒழுங்குக்குழு (Disciplinary Board) இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தனது உறுப்பினர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட தீர்ப்புக்கு எதிராக எந்தவித முறையீடும் செய்யப் போவதில்லை என்றும் அவர் கூறினார்.
ரொனால்ட் பகிர்ந்த இடைநீக்க அறிவிப்பில், கட்சியின் அரசியலமைப்பின் 9.1.4 பிரிவையும், உறுப்பினர்களுக்கான ஒழுக்க மற்றும் நடத்தை விதிமுறைகளையும் மீறியதாகக் கூறி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், “நான் உண்மையாகவே தவறு செய்திருந்தால், வெறும் இடைநீக்கம் செய்வதற்குப் பதிலாக நேரடியாக கட்சியிலிருந்து நீக்கிவிடலாம்,” என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



