அல்-நஸரை விட்டு வெளியேற ரொனால்டோ யோசனை?

top-news

ரியாத், பிப். 4-

போர்த்துகல் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ, வரும் கோடை மாற்றுக் காலத்தில் சவூதி அரேபியாவின் அல்-நஸர் அணியை விட்டு விலகுவது குறித்து ஆச்சரியமான முடிவை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவரை ஒப்பந்தம் செய்ய விரும்பும் எந்தக் கிளப்பும் மிக உயர்ந்த கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

41 வயதான ரொனால்டோ, அல்-நஸர் அணியின் “நிர்வாகம்” தொடர்பாக அதிருப்தியில் இருப்பதால் தற்போது  எதிர்ப்பு (mogok) நடவடிக்கையில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சவூதி புரோ லீக் (RSL) போட்டியில் உள்ள போட்டி அணிகளுக்கு, பொது முதலீட்டு நிதி (PIF) மூலம் சிறப்பு ஆதரவு வழங்கப்படுவதாக அவர் கோபமடைந்துள்ளார்.

குளிர்கால மாற்றுக் காலத்தில், அல்-நஸர் அணியால் எதிர்பார்த்த அளவுக்கு புதிய வீரர்களை சேர்க்க முடியவில்லை. கடந்த மாதத்தில் அணி ஒரே ஒரு வீரரை மட்டும் ஒப்பந்தம் செய்தது. அவர் 21 வயதான மத்திய கள வீரர் ஹைடீர் அப்துல்கரீம் ஆவார்.

அணி பயிற்சியாளர் ஜோர்ஜ் ஜீஸஸ், மேலும் பல புதிய வீரர்களை சேர்க்க வேண்டுமென கோரியிருந்தாலும், நிர்வாகம் அதனை நிறைவேற்றவில்லை. இதன் காரணமாக ரொனால்டோ அணியிலிருந்து வெளியேறும் முடிவை தீவிரமாக பரிசீலிக்கிறார் என கூறப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *