ரொனால்டோ போர்த்துகல் கேப்டனாக தொடர்வாரா?

top-news
FREE WEBSITE AD

ஹூஸ்டன், ஜூன் 18 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் கே’ பிரிவு ஆட்டத்தில் டி.ஆர். காங்கோவுடன் போர்த்துகல் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்ட நிலையில், அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

41 வயதான ரொனால்டோ, தனது ஆறாவது உலகக் கோப்பை தொடரில் களமிறங்கி லியோனல் மெஸ்சியின் சாதனையை சமன் செய்திருந்தாலும், இந்த ஆட்டத்தில் தனது அனுபவத்திற்கு ஏற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதாக விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இரண்டாவது பாதியில் கிடைத்த இரண்டு முக்கிய கோல் வாய்ப்புகளை ரொனால்டோ வீணடித்தார். மிக அருகிலிருந்து அடிக்கப்பட்ட இரண்டு முயற்சிகளும் இலக்கைத் தவறவிட்டதால் போர்த்துகல் வெற்றியை இழந்ததாகக் கூறப்படுகிறது.

52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்ற டி.ஆர். காங்கோ அணிக்கு எதிராக போர்த்துகல் வெறும் சமநிலையிலேயே முடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *