நஜீப்பின் மனைவியை அரசாங்கம் மன்னிக்கிறதா? பி.கே.ஆர் MP சாடல்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 12,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் மனைவி ரோஸ்மாவுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பு மேல்முறையீடு செய்யாதது வருத்தமளிப்பதாக ஜொகூர் மாநிலப் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவரும் TEBRAU நாடாளுமன்ற உறுப்பினருமான Jimmy Puah Wee தெரிவித்தார். அரசு நிதி கையாடல் வழக்கை எதிர்நோக்கியிருக்கும் ரோஸ்மா மன்சூர் நீதிமன்ற விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதற்கும் மேல்முறையீடு செய்யாததற்கும்  அட்டர்னி ஜெனரல் விளக்கம் அளிக்க வேண்டும் என Jimmy Puah Wee வலியுறுத்தினார். 

இந்த வழக்கு நாட்டின் மீதான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கும் எங்களைப் போன்ற தலைவர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காகக் கடந்த காலங்களில் வீதிகளில் போராடிய நாம் இப்போது மேல்முறையீடு செய்யாமல் அமைதியாக இருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக Jimmy Puah Wee தெரிவித்தார். அரசாங்கத்தின் அமைதி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் குறிப்பதாக Jimmy Puah Wee தெரிவித்தார். அரசாங்கம் ஊழல்வாதி என குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சூரை மன்னித்து ஏற்றுக்கொள்கிறதா என Jimmy Puah Wee சாடினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *