நஜீப்பின் மனைவி ரோஸ்மாவின் PASSPORT விவகாரம்! நீதிமன்றம் கருணை!

top-news
FREE WEBSITE AD

அக்தோபர் 31,

முன்னாள் பிரதமர் நஜீப்பின் மனைவி ரோஸ்மா மன்சூரின் பாஸ்போர்டை மேலும் 3 மாதங்களுக்குச் செல்லுபடியாகும் என நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 24 முதல் இன்று வரையில் ரோஸ்மா அவரின் பாஸ்போர்ட்டை வைத்திருக்கலாம் என்றும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் கடந்த ஜூலை 24 மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இன்றுடன் நிறைவடையும் ரோஸ்மாவின் பாஸ்போர்ட் தடை தளர்வு, மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற விசாரணைகளில் தடையின்றி ரோஸ்மா ஆஜராக வேண்டுமென மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சரவாக்கில் உள்ள பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான RM1.25 பில்லியன் நிதியை மோசடி செய்ததாகக் கடந்த ஆண்டு ஜனவரி 31 ரோஸ்மாவின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருக்கும் தனது மகளுக்கு ஆதரவாகவும் பேரப்பிள்ளைகளைக் கவனிக்கவும் தாம் வெளிநாட்டுக்குப் பயணிக்க வேண்டியதால் தனது பாஸ்போர்ட்டின் தடையில் தளர்வை ஏற்படுத்தும்படி ரோஸ்மா கேட்டுக்கொண்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *