ரோஸ்மா மன்சூரின் மேல்முறையீடு ஒத்திவைப்பு

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, பிப். 25-

சரவாக் மாநிலத்தின் வெளிநாட்டு (புறநகர்) பள்ளிகளுக்கான சோலார் எரிசக்தி திட்ட ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்த உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்கக் கோரும் மேல்முறையீடு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமரின் மனைவியான ரோஸ்மா, வீட்டில் தவறி விழுந்ததால் மருத்துவ விடுப்பில் இருப்பதாக அவரது தரப்பு வழக்கறிஞர் டத்தோ ஜக்ஜித் சிங், கூட்டாட்சி நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வுக்குத் தெரிவித்தார்.

“வீட்டில் தவறி விழுந்ததில், கைகள் மற்றும் இரு முழங்கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியிருந்தாலும், அவர் அதை நிராகரித்து வீட்டிலேயே ஓய்வெடுக்க விரும்புகிறார்,” என்று ஜக்ஜித் சிங் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றம் வழக்கை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைத்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *