தலைநகரில் விபச்சாரம்! 16 பெண்கள் உட்பட 24 வெளிநாட்டினர் கைது
- Shan Siva
- 21 May, 2026
கோலாலம்பூர், மே 21: குடிநுழைவுத் துறை நடத்திய
ஒரு நடவடிக்கையில், விபச்சாரக் கும்பல் முடக்கப்பட்டது. இதில் 16 பெண்கள் உட்பட
மொத்தம் 24 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.
ஒரு மாத கால
கண்காணிப்பின் பேரில், அத்துறையின் சிறப்பு
தந்திரோபாயக் குழு , புலனாய்வு மற்றும்
சிறப்பு நடவடிக்கைப் பிரிவு, மற்றும் கோலாலம்பூர்
மாநகராட்சி ஆகியவற்றின் குழுவினர், ஜாலான் துன் சியூ சின்
பகுதியில் உள்ள கோத்தா ராயா பகுதிக்கு அருகே இருந்த நான்கு மாடிக் கடை ஒன்றில்
அதிரடி சோதனை நடத்தினர்.
'ஆபரேஷன் கெகார்' என்ற குறியீட்டுப் பெயரிடப்பட்ட இந்த
நடவடிக்கையின் போது, சோதனை நடத்திய
குழுவினர் 27 வெளிநாட்டினர் மற்றும் இரண்டு உள்ளூர்வாசிகள் உட்பட 29 பேரை ஆய்வு
செய்தனர். இதன் விளைவாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த வளாகம் ஒரு சுழற்சி
முறையில் இயங்கி வந்தது. அங்கு ஒரு அமர்வுக்கு RM80 முதல் RM120 வரை சேவைகள் வழங்கப்பட்டன. அதிகாரிகளால்
கண்டறியப்படுவதைத் தவிர்க்க கடுமையான உள் கட்டுப்பாடுகள்
நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அனைவரும் மேலதிக விசாரணைக்காக புத்ரா ஜெயா
குடிநுழைவுத்துறை தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



