பிரம்படி மாணவர்களுக்குத் தீர்வாகாது! – கல்வி அமைச்சர் உறுதி!
- Thinagaren Sanggaren
- 05 Oct, 2025
அக்தோபர் 5,
ஆசியர்கள் மாணவர்களைப் பிரம்பால் அடிக்க கூடாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகக் கல்வி அமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார். மாணவர்களை நல்வழிப்படுத்த பிரம்படி தீர்வாகாது என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் Fadhlina Sidek தெரிவித்தார். மாணவர்களின் ஒழுக்கமற்ற செயலுக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் பொறுப்பேற்க வேண்டுமே தவிர அவர்களுக்குப் பிரம்படி வழங்குவதால் மாணவர்களின் ஒழுக்கம் சீர்ப்படுத்தப்படும் என்கிற மனப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் Fadhlina Sidek தெரிவித்தார்.
பொது இயக்கங்களும் கல்வி ஆலோசகர்களும் மாணவர்களுக்குப் பிரம்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினாலும் தாம் இதில் உறுதியாக இருப்பதாக Fadhlina Sidek தெரிவித்தார். பிரம்படி வழங்க வேண்டும் என வலியுறுத்துபவர்கள் பள்ளி மாணவர்களின் ஒழுக்கமற்று செயல்படாமல் இருக்க பயிலரங்கை மேற்கொள்ள வேண்டும் என Fadhlina Sidek வலியுறுத்தினார். பிரம்படியால் மாணவர்களைத் திருத்த முடியாது. அது ஆசிரியர்களுடைய கோபத்தின் வெளிப்பாடாக மட்டுமே அமையும் என்றும் மாணவர்களுக்குக் காயத்தை ஏற்படுத்துமே தவிர அவர்களின் ஒழுக்கமின்மை செயல்களைத் திருத்தாது என Fadhlina Sidek தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



