விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசலில் சுமார் 33 பேர் பலி தீவிர சிகிச்சை பிரிவில் 12 பேர்!
- Muthu Kumar
- 28 Sep, 2025
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அங்கு அவரைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 33 பேர் உயிரிழந்து விட்டதாகவும்,12 பேர் மிக அவசர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த துக்க நிகழ்வுக்கு காரணமே விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் காவல் துறை அறிவுறுத்தலை பின்பற்றாதது தான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
நேற்றைய சுற்றுப் பயணத்தில் அவர் காலை 8.45 மணிக்கு நாமக்கலில் பேச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர் தனது சென்னை வீட்டில் இருந்தே காலை சுமார் 8 மணிக்குத்தான் விமானநிலையத்திற்கு புறப்பட்டார். காலை 8.45 மணிக்கு நாமக்கலில் உரையாற்ற அவர் வீட்டில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டுள்ளார் என்றாலே, விஜய் வேண்டும் என்றே மெத்தனமாக காலையில் தனது பயணத்தைத் தொடங்கி உள்ளார் என்ற விமர்சனம் எழுந்து வருகிறது.
இது மட்டும் இல்லாமல் அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றச் சொல்லி அறிவுறுத்தி உள்ளார். ஆனால் அதை அவரே பின்பற்றவில்லை. அப்படி இருக்கும்போது அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் எப்படி பின் பற்றுவார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை நினைத்து பலரும் வருத்தத்தில் உள்ளார்கள். இது மட்டும் இல்லாமல், மேலும் பலி எண்ணிக்கை உயருமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் உள்ளது. அதே நேரத்தில் பலி எண்ணிக்கை உயர கூடாது என்று பிராத்தனைகளிலும் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த சோக நிகழ்வுக்கு முழுக்காரணம் விஜய் தான் என்று விமர்சிப்பவர்களும் உள்ளார்கள். மதியம் 12 மணி வாக்கில் கரூரில் அவருக்கு பேச அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவர், மாலை சுமார் 7 மணி வாக்கில்தான் அங்கு வந்து சேர்ந்தார். ஒருவேளை காவல்துறை சொன்ன நேரத்திற்கு அவர் வந்திருந்தால் வெளிச்சத்தில் இவ்வளவு பெரிய சோக நிகழ்வு நடக்க வாய்ப்புகள் குறைவு என்றும் பேசி வருகிறார்கள்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட பல அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக எம்.எல்.ஏக்கள் என பலரும் கரூர் அரசு மருத்துவமனைக்கு சென்று, நிலைமையை கண்காணித்து வருகிறார்கள். முதலமைச்சரும் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கரூர் சென்றடைந்த விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்துக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதே இவ்வளவு பெரிய துயரத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக மயக்கமடைந்தவர்களுடன் ஆம்புலன்சில் வந்த பெண் ஒருவர் கூறுகையில், "எல்லாரும் தூரமா தான் நின்றுக்காங்க...அப்பறம் கரண்ட் கட் பண்ணிட்டாங்க. அதனால விஜய் பேசுவது எதுவும் கேட்கவில்லை...அதனால் எல்லாரும் முன்னாடி போனா பேசுவது கேட்கும் என்று முன்னாடி போக ஆரம்பிச்சிட்டாங்க. அதுனால நெரிசல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர்" என்றார்.
இந்நிலையில் கரூர் மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் நலம் விசாரிக்க வருகை தந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்,
"இது தவிர்க்க முடியாத விபத்துதான். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலையும், இறந்தவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தம்பி விஜய்யும், அவரது கட்சியினரும் மனவேதனையில் தான் இருப்பார்கள்" என்று பேசியிருக்கிறார்.
இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்த நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 12 பேர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



