த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க ரூ.35 கோடி பேரம்; சிங்கப்பூர் தொழில் அதிபருக்கு போலீஸ் வலைவீச்சு

top-news
FREE WEBSITE AD

சென்னை, ஜூலை 10-

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசை கவிழ்க்க, ஊத்தங்கரை தொகுதி எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் Senthil Balaji-யின் ஆதரவாளர்கள் உட்பட 9 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் திருநாவுக்கரசு, தியாகராஜன், நரேஷ், ரமேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கைதானவர்களுடன் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரது பெயர் Lakshmana Perumal எனவும், அவர் சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வருபவர் எனவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் சட்டவிரோத அவாலா பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *