பேராக் பாஸ் தலைவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – ராயர் கேள்வி!

top-news

நவம்பர் 20,

மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு அதிகாரம் வழங்க கூடாது என பேராக் மாநிலப் பாஸ் கட்சி தலைவர் Razman Zakaria தெரிவித்திருப்பது நாட்டின் இன மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் ஒரு செயல் என்றாலும் காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன் என Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். 
இவர்களைப் போன்றவர்கள் நாட்டின் அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பாஸ் கட்சியினர் பலரும் தொடர்ந்து மலாய்க்காரர் அல்லாதவர்கள் குறித்து இழிவானக் கருத்துகளைப் பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 17 பிப்ரவரி 2023 திரங்கானுவில் பாஸ் கட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் போர்வாள், கவசங்களை ஏந்தி ராணுவ அணிவகுப்பு நடத்தியதையும் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் அமைதியாகிவிட்டதாகவும் இவர்களைப் போன்றவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட வேண்டும் என Jelutong நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

RSN Rayer (PH-Jelutong) menggesa PDRM bertindak segera terhadap individu yang didakwa mengeluarkan kenyataan menghasut dan menggugat keharmonian negara, termasuk Pesuruhjaya PAS Perak, Razman Zakaria. Rayer mempersoalkan kelewatan tindakan terhadap ucapan berbaur perkauman Razman dan perhimpunan tanpa permit yang dikatakan boleh mencetuskan ketegangan. Beliau menekankan pentingnya tindakan tegas untuk memelihara keamanan negara

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *