நாடாளுமன்றத்தில் Shahidan Kassim & RSN Rayer வாக்குவாதம்! எச்சரித்த துணை சபாநாயகர்!

top-news
FREE WEBSITE AD

நவம்பர் 5,

இன்றைய நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Shahidan Kassim நாடாளுமன்றத்தை அவமதித்ததாக டி.ஏ.பியின் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அரசுத் திட்டங்களுக்கு எதிராக எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் பல்வேறுக் குற்றச்சாட்டுகளுக்கு நாடாளுமன்றம் ஒருதலை பட்சமாக அரசுக்கு மட்டுமே ஆதரவாக இயங்குவதாகப் பெரிக்காத்தானின் ARAU நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Seri Shahidan Kassim குற்றம்சுமத்தினார். Datuk Seri Shahidan Kassim நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மக்களவையின் மீது நம்பிக்கையில்லை என குற்றம்சுமத்துவது நாடாளுமன்றத்தை அவமதிக்கும் செயல் என டி.ஏ.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் RSN Rayer வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனிடையே பெரிக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசு நிதிகள் வழங்காமல் அன்வார் தலைமையிலான மடானி அரசு தாமதிப்பதாகவும் இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கும் போதெல்லாம் நாடாளுமன்றச் சபாநாயகர் அரசுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார். அன்வார் நாட்டின் பிரதமர், எங்களுக்கும் அவர் தான் பிரதமர், ஆனால் அன்வார் ஒரு தலைப்பட்சமாகச் செயல்படுவதை நாடாளுமன்றம் கண்டும் காணாது இருப்பதாக Datuk Seri Shahidan Kassim தெரிவித்தார். இந்த வாக்குவதத்தால் எந்தவொரு பயனும் இல்லை என நாடாளுமன்றத் துணை சபாநாயகர் Alice Lau தெரிவித்தார். Shahidan Kassim & RSN Rayer இருவரும் அமைதியாக அமரும்படியும் மீறினால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கபடும் என நாடாளுமன்றத் துணை சபாநாயகர் Alice Lau எச்சரித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *