ஏப்ரல் 6 முதல் 9 வரை செயற்கை மழை!
- Shan Siva
- 01 Apr, 2026
கோலாலம்பூர், ஏப் 1: நீடித்த வெப்ப வானிலையால் பாதிக்கப்பட்ட
அணைகளின் நீர் மட்டத்தை அதிகரிக்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமையான நாட்மா, ஏப்ரல் 6 முதல் 9 வரை பேராக், கெடா, பெர்லிஸ் மற்றும் ஜொகூர் ஆகிய
பகுதிகளில் செயற்கை மழையை உருவாக்கும் பொருட்டு மேக விதைப்புப் பணிகளை மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29 அன்று தொடங்கிய பருவமழை மாற்றத்தால் ஏற்பட்ட இந்த வெப்ப அலை, மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக துணைப் பிரதமர்
அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.
இந்தக் காலகட்டத்தில் மலேசியத் தீபகற்பத்தின் மேற்குப்
பகுதிகளிலும், சபா மற்றும் சரவாக்கிலும் இடியுடன் கூடிய மழையும் கனமழையும்
ஏற்பட்டாலும், பல பகுதிகள் முதல் மற்றும் இரண்டாம் நிலை வெப்ப அலைகளை எதிர்கொள்ளும்
அதிக அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமைகள் அணைகளின் நீர்மட்டத்தை அதிகரிக்க உதவவில்லை. இதனால், நீர் வளங்கள், விவசாயத் துறை ஆகியவை பாதிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்விலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று அவர் ஒரு அறிக்கையில் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



