100 டாலர்களைத் தாண்டிய கச்சா எண்ணெய் - முதலீட்டாளர்களை ஈர்க்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்!

top-news
FREE WEBSITE AD

2022-ம் ஆண்டிற்குப் பிறகு, கச்சா எண்ணெய் இன்று ஒரு பேரலுக்கு 100 டாலர்களைத் தாண்டி வர்த்தகம் ஆகி வருகிறது.இந்த ஏற்றம் இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடரும் என்பது தெரியவில்லை. "இப்போதைய சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்குக் கிட்டத்தட்ட 114 டாலர்கள் என வர்த்தகம் ஆகி வருகிறது.

ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பிறகு, கச்சா எண்ணெய் 100 டாலர்களைத் தாண்டி இருப்பது இதுவே முதல் முறை.1980-ம் ஆண்டில் இருந்து தரவுகளை எடுத்துப் பார்த்தால், தற்போதைய ஈரான் போரில்தான் கச்சா எண்ணெயின் விலை வேகமாக எகிறி உள்ளது.

இந்த ஏற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன - ஒன்று, பல எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை நிறுத்தியுள்ளன. ஹார்மோஸ் ஜலசந்திக்குப் பின், கிட்டத்தட்ட 16 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் வணிகத்திற்காகக் காத்திருக்கின்றன.இன்னொன்று, சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன் போன்ற நாடுகளில் நடந்த டிரோன் தாக்குதலில் அங்கே உள்ள உற்பத்தி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், அங்கே உற்பத்தி தடைப்பட்டுள்ளன.

தொடரும் போரினால், தினமும் 3.3 மில்லியன் பேரல் பற்றாக்குறையோடு எண்ணெய் வர்த்தகம் ஆகி வருகிறது. இது தொடர்ந்தால் கிட்டத்தட்ட 4.7 மில்லியன் பேரல் உற்பத்தி சப்ளை பற்றாக்குறை ஏற்படும்.இந்தப் போர் தொடர்ந்தால் கச்சா எண்ணெய் சப்ளை மற்றும் உற்பத்தி பாதிக்கும். இதனால், விலை தாறுமாறாக உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டு.கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் உலகளவிலான பொருளாதாரத்தில் 0.7 சதவிகிதப் பணவீக்கம் ஏற்படக்கூடும் தங்கம், வெள்ளியைத் தாண்டி இப்போது கச்சா எண்ணெயில் சூப்பரான டிரேடிங் வாய்ப்புகள் காத்திருக்கின்றன".

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *